தேர்தல் முடிவுக்கு பின் மொத்த இந்தியாவுக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி

x

மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு தொலைபேசி ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவை வழங்கி வருகின்றன. மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஏர்டெல், ஜியோ, வோட போன் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை, 10 முதல் 17 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி உள்கட்டமைப்புக்காக, டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்துள்ளன. அதை ஈடுகட்டும் வகையில், விரைவில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிக்னல் ட்ராபிக்கை குறைப்பதற்காக அதிக அளவிலான செல்போன் டவர்கள் மற்றும் கேபிள்கள் நாடு முழுவதும் இணைக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்