நாடாளுமன்றத் தேர்தல் எதிரொலி - "போலீஸ் அதிகாரிகள் மாற்றம்?".. தமிழக டிஜிபி சுற்றறிக்கை

x

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊரிலும் மற்றும் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஓரிடத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள, தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஜூன் 30-ம் தேதிக்குள் 3 ஆண்டுகள் முழுமையாக முடிந்தவர்கள் பட்டியலை தயாரித்து அனுப்ப, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ள அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு வரும் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். கணினி வேலை மற்றும் சிறப்பு பிரிவுக்காக பணியமர்த்தப்பட்டவர்கள் இந்த பணியிட மாற்றத்திற்கு உட்படுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்