கண்ட்ரோலை எடுத்த துணை ராணுவம் - சுற்றிவளைக்கப்பட்ட டெல்லி | G20 | Delhi

x

டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டை யொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா தலைமை வகிக்கும் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாடு டெல்லியில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு நடைபெறும் டெல்லி பிரகதி மைதானத்தில் அதிநவீன துப்பாக்கிகளை ஏந்திய துணை ராணுவத்தினர், போலீசார்

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் சாதனைங்களை கொண்டு சோதனை நடத்தப்பட்டது.

டெல்லி முழுவதும் போலீசார் சாலைகளில் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய இடங்களில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் அமைத்து, ரோபோ இயந்திரங்களை கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேகொண்டனர். டெல்லி முழுவதும் 80 ஆயிரம் போலீசார்

உள்பட 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்