நிரம்பி வழியும் டெல்லி மருத்துவமனை கழிவறைகள் - அதிரடி உத்தரவிட்ட கெஜ்ரிவால்
டெல்லி யமுனை குறுக்கே உள்ள மிகப்பெரிய ஜிடிபி மருத்துவமனையின் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன எனவும் டெல்லி மருத்துவமனைகள் இப்படித்தான் இருப்பதாகவும் இளைஞர் ஒருவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எக்ஸ் தளத்தில் டேக் செய்து பதிவிட்டுள்ளார் .
மேலும் நோயாளிகள், உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் வாயில் துணியை கட்டிக்கொண்டு கழிப்பறை வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை மேற்கோள்காட்டி மூத்த அதிகாரிகளுடன் மருத்துவமனைக்கு சென்று சரிவர நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சருக்கு நான் உத்தரவிட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார்.
Next Story