ஓடோபோன் ஐடியா 5G சேவைகளுக்கு புதிய கடன்களை திரட்ட திட்டம்

x

ஓடோபோன் ஐடியா 5G சேவைகளுக்கு புதிய கடன்களை திரட்ட திட்டம்


கடன் சுமை மற்றும் தொடர் நஷ்டத்தில் உள்ள ஓடோபோன் ஐடியா நிறுவனம், 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கடனை முன் கூட்டியே திருப்பி செலுத்தியுள்ளது.

இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் அலைபேசி சேவை நிறுவனமான ஓடோபோன் ஐடியாவின் நிகர நஷ்டம், ஜூனில் முடிந்த காலாண்டில் 7 ஆயிரத்து 296 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

டவர் வாடகை, உபகரண விற்பனையாளர்கள், இதர விற்பனையாளர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகை 14 ஆயிரத்து 956 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.ஐ வங்கியிடம் வாங்கியிருந்த 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் குறுகிய கால கடனை ஓடோபோன் நிறுவனம் முன்கூட்டியே திருப்பி செலுத்தியுள்ளது.

5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த தேவையான உபகரணங்களை வாங்கவும், டவர் வாடகை,

விற்பனையாளர்களுக்கு அளிக்க வேண்டிய தொகைகளை திருப்பி செலுத்தவும் புதிய வங்கி கடன்கள் வாங்க ஓடோபோன் திட்டமிட்டுள்ளது.

வங்கிகளின் நம்பிக்கையை பெற 2 ஆயிரத்து 700 கோடி கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்