பறந்த உத்தரவு... "அங்கீகாரம் ரத்தாகும்.." - பள்ளிகளுக்கு எச்சரிக்கை | Schools

x
  • 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள், வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே செய்முறை பொதுத் தேர்வுக்கான விதிமுறைகளை சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது.
  • அதன்படி செய்முறை தேர்வுக்கான உபகரணங்கள், ஆய்வகம் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும், மதிப்பெண்களை தினசரி பதிவு செய்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் வெளியில் இருந்து வரும் ஆசிரியர் பதிவு செய்யும் மதிப்பெண்ணை, பள்ளிகளை சார்ந்தவர்கள் மாற்றக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளில் தேர்வு மைய அங்கீகாரம் ரத்தாகும் என எச்சரித்துள்ள சி.பி.எஸ்.இ, கொடுக்கப்பட்டுள்ள தேதிகளை காட்டிலும் கூடுதலாக நாட்கள் ஒதுக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்