உலகத்தில் மாறாத ஒன்று-பருவங்கள் மாறி காலங்கள் ஓடியும்-பிணவறை வாசலையே பார்த்து இருக்கும் `ராமு'
கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு நாயுடன் வந்த அதன் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகக் கூறப்படுகிறது... இந்நிலையில், பிணவறைக்கு வெளியே கடந்த 4 மாதங்களாக இந்த நாய் காத்திருக்கிறது... அதற்கு மருத்துவமனை ஊழியர்கள் ராமு என்று பெயர் வைத்துள்ளனர்... வேறு எந்த நாய்களுடனும் பழகாது... எல்லாரும் தரும் உணவுகளையும் உண்ணாது... மருத்துவமனையின் பிணவறை கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் சட்டென்று எழுந்து நிற்கும் ராமு, தன்னுடைய முதலாளி உள்ளே இருந்து வருவார் என நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கும்... ஆனால் அந்த நோயாளி யார் என யாருக்கும் தெரியவில்லை... மருத்துவமனையிலேயே இருந்த போதும், ராமு இதுவரை யாரையும் தொந்தரவு செய்ததில்லை... ஆறறிவு கொண்ட மனிதர்களே தனக்கு உதவி செய்தவரை மறந்து விடும் இந்தக் காலத்தில், தன்னை வளர்த்த ஒரே காரணத்திற்காக தன் எஜமானர் என்றேனும் வந்து விடுவார் என்று நம்பிக் கொண்டு பிணவறைக்கு வெளியிலேயே காத்திருக்கும் ராமுவின் அன்பு நெகிழ்ச்சி அடைய வைக்கிறது...