ஓணம் பண்டிகையை வெறித்தனமாக கொண்டாடி தீர்த்த தமிழகத்தின் ஒரு மாவட்டம்
ஓணம் பண்டிகை குமரி மாவட்டம் குழித்துறையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குமரியில் அதிக அளவில் மலையாள மொழி பேசும் மக்கள் வசித்து வருவதால் ஓணம் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக கேரள பாரம்பரிய உடை அணிந்து மாவேலி மன்னன் வேடமணிந்த நபரை மேள தாளங்கள் முழங்க புலியாட்டம், தெய்யம் கதகளி உள்ளிட்ட கேரள கலாச்சார கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக வீடுகளுக்கு அழைத்து சென்று கொண்டாடி மகிழ்ந்தனர். மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக மக்கள் தங்களது வீடுகளில் பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு வரவேற்று வரவேற்றனர்...
Next Story