"தொற்று நோய், வாந்தி, உடல் சோர்வு" - குமுறும் சென்னை OMR மக்கள்

x

தொற்று நோய், வாந்தி, உடல் சோர்வு" - குமுறும் சென்னை OMR மக்கள்

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு

குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாக

அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

அங்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

கழவுநீர் கலந்த குடிநீரை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு தொற்று நோய், வாந்தி , உடல் சோர்வு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் , பெரியவர்களுக்கு தோல் நோய் உள்ளிட்டவை உண்டாவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்