ஓமன் விபத்தில் சிக்கிய தமிழர்.. "5 நாள் ஆகியும் எந்த துப்பும் இல்லை.." கலெக்டர் ஆபிஸில் தஞ்சம்
ஓமன் கடற்பகுதியில் கப்பல் விபத்தில் சிக்கிய தனது கணவரை மீட்டுத் தரக் கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழிலரசி என்ற பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கணவர் தனஞ்ஜெயன் சென்ற கப்பல், 6 நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதாகவும், தனது கணவரை மீட்கக் கோரி 4 நாட்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர் ஆதித்ய செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், தனஞ்ஜெயனை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து எழிலரசி போராட்டத்தை கைவிட்டார்.
Next Story