மூதாட்டியை கொடூரமாக தாக்கும் மருமகள் - தலைகீழாக விழுந்த சோகம்
கேரள மாநிலம், கொல்லத்தில் 80 வயது மூதாட்டியை மருமகள் தாக்கி, கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேவலக்கரை நடுவிலக்கரையைச் சேர்ந்த எலியம்மாவை அவருடைய மருமகள் மஞ்சுமோள் வர்கீஸ் அடிக்கடி தாக்கி துன்புறுத்தி வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு எலியம்மாவை மருமகள் கீழே இடித்து தள்ளியபோது, தற்செயலாக அங்கு வந்த கணவரின் நண்பர் ஷியாம், சம்பவத்தை செல்போனில் பதிவு செய்தார். மூதாட்டி அளித்த புகாரின்பேரில் மருமகள் கைது செய்யப்பட்டு, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணையம், தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டது.
Next Story