நாட்டையே உலுக்கிய ஒடிசா கோர ரயில் விபத்து.. நீதிபதி கேள்வி. மத்திய அரசுக்கு கெடு

x

தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையான கவச் திட்டத்தை அமல்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை வழங்க கோரிய மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் பலியாயினர், ஆயிரத்து 175 பேர் காயம் அடைந்தனர். இந்த ரயில் விபத்து தொடர்பாக வழக்குரைஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையான கவச் திட்டத்தை அமல்படுத்த தேவையான நிதிச் சுமை குறித்து ஆய்வு செய்தீர்களா என கேள்வி எழுப்பினர்.

மேலும், பொதுநல மனுவை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் அளிக்குமாறும், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்ககுமாறும் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்