சிரஞ்சில் மருந்து நிரப்பாமல் 2 மாத குழந்தைக்கு ஊசி போட்ட Nurse - அடுத்த நொடியே நடந்த சம்பவம்

x

கொல்லம் மாவட்டம் பெரிநாடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர்களாக ஷீபா, லுர்த் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு, ஸ்ரீலட்சுமி என்பவர் தனக்கு பிறந்த 75 நாட்களே ஆன மகளுக்கு தடுப்பூசி போட வந்துள்ளார். அப்போது, செவிலியர் ஷீபா ஊசி போட்ட போது, மருந்து இல்லாமல் காலி சிரிஞ்சில் ஊசி போட்டுள்ளார். இதைப்பார்த்து பயத்தில் ஸ்ரீலட்சுமி கேட்ட போது, மருந்து நிரப்ப மறந்துவிட்டேன் எனக்கூறி அங்கிருந்து செவிலியர் சென்றுள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கு பொதுமக்கள் குவிந்து கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தியதில், பணியில் இருந்த செவிலியர்கள் இருவருக்கும் இடையே தகராறு நடந்த‌தும், அப்போது கவனக்குறைவால் ஷீபா காலி சிரிஞ்சில் ஊசி போட்டதும் தெரிய வந்த‌து. இதையடுத்து, 2 செவிலியர்களும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். குழந்தையின் உடலில் மிக‌க் குறைந்த அளவே காற்று நுழைந்துள்ளதாகவும், அதனால் குழந்தைக்கு பிரச்சினை எதுவும் ஏற்படாது என்றும் பெற்றோரிடம் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்