"பண பலன்கள் கிடைக்கவில்லை"கம்பெனி முன்னால் தீக்குளித்த ஊழியர்... புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்
புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான கான்பெட் நிறுவனத்தில், சோபித்குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தார். தனக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பணபலன்கள், 3 ஆண்டுகள் ஆகியும் கிடைக்காததால் கடும் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சோபித்குமார், கான்ஃபெட் தலைமை அலுவலகத்திற்கு முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சோபித்குமார் உயிரிழந்தார்
Next Story