``அந்த மர்மம் என்ன?’’ - நிர்மலா சீதாராமன் கணவர் எழுப்பிய பகீர் சந்தேகம்

x

மக்களவைத் தேர்தல் முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவருக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் லட்சக்கணக்கான கடிதங்களை அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் கூறியுள்ளார்.

திருடப்பட்ட தீர்ப்பு? என்ற தலைப்பில், சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, தேர்தல் நடந்த பிறகு வாக்குப்பதிவு குறித்த புள்ளிவிவரங்களை தேர்தல் ஆணையம் மாற்றிக் மாற்றி கூறியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

ஒன்றே முக்கால் மணி நேரத்தில், நான்கு கோடியே 60 லட்சம் வாக்குகள் எப்படி வந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகவே அதன் செயல்பாடுகள் வெளிப்படுத்தின என்று கூறியுள்ள அவர்,

இந்த சந்தேகங்கள் குறித்து குடியரசு தலைவருக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் லட்சக்கணக்கான கடிதங்களை அனுப்பி மக்கள் விளக்கம் கேள்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் முறைகேடுகள் குறித்து அரசியல் கட்சிகள் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று கூறிய அவர்,

கேள்வி கேட்காவிட்டால் ஜனநாயகம் இறந்துவிடும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்