பட்ஜெட் 2024 - அல்வா கிண்டினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

x

பட்ஜெட்டுக்கு முன்பு தொடங்கும் வழக்கமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டினார்.

நடப்பு பட்ஜெட்டை ஜூலை 23ம் தேதி காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக

நார்த் பிளாக்கிற்கு கீழே உள்ள அடித்தளத்தில் உள்ள பட்ஜெட் அச்சகத்தில் பெரிய பாத்திரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டினார்.

ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் உரையை முடித்த பிறகு, பட்ஜெட் ஆவணங்கள் யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில் கிடைக்கும்.


Next Story

மேலும் செய்திகள்