"எப்போது வேண்டுமானாலும் நுழையலாம்"..பெரும் பதற்றத்தில் தமிழக எல்லை
நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரள எல்லையில் ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது... கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்த நிலையில்
அந்தப் பகுதியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... இந்த நிலையில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பாண்டிகாடு கூடலூர் அருகே உள்ளதால் தமிழக பகுதிக்குள் வரும் மலப்புரம் மாவட்ட சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் எனவும், வெளியில் விற்கப்படும் பழங்கள் மற்றும் உணவுகளை உண்ண வேண்டாம் என்றும், ஏதேனும் காய்ச்சல் அறிகுறி இருக்கும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி அறிவுறுத்தப்பட்டு வருகிறது... நாடு காணி, சோலாடி, தாளூர், பாட்ட வயல், நம்பியார் குன்னு, போன்ற சோதனை சாவடிகளில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மலப்புரம் மாவட்டத்திலிருந்து வரக்கூடிய பேருந்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கையை பதிவேட்டில் பதிவு செய்யும் பணியிலும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்...