சிறுவன் உயிரை பறித்த வைரஸ்.. தமிழகத்துக்கு வந்தது ஆபத்து - மரண பயத்தில் மக்கள்.. உஷார்

x

கேரள மாநிலம் பாண்டிக்காடு பகுதியில் நிபா வைரசால் சிறுவன் ஒருவன் பலியான நிலையில் ஒருபக்கம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் மறுபக்கம் வைரசுக்கு காரணமான வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக தமிழகம் நோக்கி கேரளாவில் இருந்து படையெடுத்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தமிழக, கேரள எல்லையில் கடும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் நீலகிரி எருமாடு பகுதியில் உள்ள கற்பூர மர சோலையில் கூட்டம் கூட்டமாக கேரளாவில் இருந்து வவ்வால்கள் படையெடுத்து தஞ்சம் அடைந்துள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்... வனத்துறையினர் வவ்வால்களை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்