மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்? பதற்றத்தில் கேரளா! | Nipah Virus | Kerala

x

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 4 பேருக்கு நிபா வைரஸ் தாக்கிய நிலையில் இரண்டு பேர் உயிரிழந்தனர். வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதாகவும், வயநாட்டில் உள்ள வவ்வால்களை சோதனை செய்ததில் அவற்றுக்கு நிபா தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

வவ்வால்கள் சாப்பிட்ட பழங்களை உண்ண வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை அமைச்சரும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், மூணாறு எம்.ஜி. காலனியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கி உள்ளதால் மீண்டும் நிபா வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ளனர். சுகாதாரத்துறையும், வனத்துறையும் சேர்ந்து வவ்வால்களை உடனடியாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்