கேரளாவை ஆட்டிப்படைக்கும் `நிபா' - சுகாதார அமைச்சரின் திடீர் தகவல்
8 வது நாளாக புதிதாக யாரும் நிபா பாதிப்பு இல்லாதது நிம்மதி அளிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நிபா அச்சுறுத்தல் ஓய்ந்துள்ள நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பின. வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story