பழங்களுக்குள் மறைந்திருந்த அந்த பொருள்.. வசமாக சிக்கிய வியாபாரி
நீலகிரி மாவட்டம் கூடலூரில் பழக்கடை வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கூடலூர் நகர பகுதியில் மாணவர்களுக்கு நூதன முறையில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்ததில், பழக்கடை வைத்துள்ள சாகுல் ஹமீது என்பவர், பழங்களுக்குள் மறைத்து வைத்து கஞ்சா விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சாகுல் ஹமீதை கைது செய்த போலீசார், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story