கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்...அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
நிபா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு புனே ஆய்வக ஊர்தியை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளது. 4 மணி நேரத்தில் 100 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யும் வகையில் அந்த வாகனத்தில் வசதிகள் உள்ளன. இதனிடையே, நிபா வைரஸ் பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய குழு கேரளாவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Next Story