புல்லட் ரயிலின் புதிய திட்டம் - அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தகவல்

x

ரயில்வே துறையில், கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 10 லட்சம் கோடியில் மூலதனச் செலவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இந்திய ரயில்வே அமைப்பு உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். நாட்டில் இன்று 23 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், 2047-ம் ஆண்டுக்குள் 4 ஆயிரத்தை 500 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதே தங்கள் நோக்கம் என்றும் குறிப்பிட்டார். உலகின் மிக உயரமான ரயில் பாலம், ஜம்மு காஷ்மீரில் கட்டப்படுவதாகத் தெரிவித்த அவர், மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளான ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் வளர்ச்சியின் மையமாக பிரதமர் மோடி மாற்றியதாக தெரிவித்தார். அயோத்தி விமான நிலையம் முழு அளவில் தயாராகி வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து, விரைவில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்