"இந்தியாவில் இனி எல்லா விமானமும் புதுசு" - வெளியானது குட் நியூஸ்

x

வெளிநாடுகளில் இருந்து விமானங்களை இறக்குமதி செய்வதற்கு, ஏர்ந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு, விமான போக்குவரத்து இயக்குநரகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ஏர் இந்தியா 470 விமானங்களையும், இண்டிகோ 500 விமானங்களையும் இறக்குமதி செய்ய, டிஜிசிஏ கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இறக்குமதிக்கு தடையில்லா சான்று வழங்கும் போது, அவற்றை நிறுவத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக, விமான நிறுவனங்கள் தங்கள் திட்டத்தை விமான நிலைய செயல்பாட்டு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்