நவராத்திரி விழா... குமரியில் இருந்து கேரளா சென்ற சுவாமி விக்கிரகங்கள் | Navratri
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் வரும் 15 தேதி நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்க, குமரி மாவட்ட விக்கிரகங்கள், சுசீந்திரம் கோவிலில் இருந்து யானை மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக புறப்பட்டு பத்மநாதபுரம் அரண்மனை வந்தடைந்தது. வியாழக்கிழமையன்று, பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னரின் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்களுடன் புறப்பட்டு இன்று களியக்காவிளை வந்தடைந்தது. அங்கு இரு மாநில போலீசாரின் அணிவகுப்புடன் பாரம்பரிய முறைப்படி தமிழக அரசிடம் இருந்து கேரளா அரசிடம் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த சுவாமி ஊர்வலத்தை வரவேற்க வழி நெடுகிலும் பக்தர்கள் கூடியிருந்து பூஜைகள் செய்து வரவேற்பு அளித்தனர்
Next Story