விண்வெளிக்கு செல்லும் பயணிகள் ராக்கெட்.. இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளிக்குப் பறக்கவுள்ளார்...
போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பரிசோதனை பயணத்தில், நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்கலத்தின் பைலட்டாகவும், மற்றும் பட்ச் வில்மோர் இத்திட்டத்தின் கமாண்டர் ஆகவும் செயல்பட உள்ளனர்... அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து இந்திய நேரப்படி நாளை காலை 8.04 மணிக்கு யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. அங்கு 1 வார காலம் தங்கி ஆய்வு மேற்கொள்வர். ஏற்கனவே 2 முறை விண்வெளிக்குச் சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் நாளை 3வது முறையாக செல்லவுள்ள நிலையில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Next Story