பட்டப்பகலில் 19 வயது இளம்பெண்ணை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்.. வேடிக்கை பார்த்த ஊழியர்கள்..
மத்தியப்பிரதேச மாநிலம் டாடியா பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக குவாலியரில் உள்ள ஜான்சி சாலை பகுதிக்கு வந்துள்ளார். சகோதரருடன் சென்றிருந்த அந்த பெண், பெட்ரோல் நிலையத்தின் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்த போது, மற்றொரு நபர், இளம்பெண்ணை தூக்கிச் சென்றார். பைக்கில் பெண்ணை தூக்கிக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றனர். பெட்ரோல் பங்கில் இருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், இளம்பெண்ணின் நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். பட்டப் பகலில் இளம்பெண் ஒருவர் தூக்கிச் சென்று கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story