மஞ்சும்மல் பாய்ஸாக மாறி அட்ராசிட்டி..எமனை கையேடு கூட்டிச் சென்ற கேங்க் -நொடியும் திக் திக்..
கேரள மாநிலம் மூணாறில், சுற்றுலாப் பயணிகள் கார் கதவில் அமர்ந்து ஆபத்தான முறையில் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூணாறு கேப் பகுதியில் உள்ள கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், புதுச்சேரி பதிவெண் கொண்ட கார் சென்றது. அதில், கார் கண்ணாடியில் இளம்பெண் உட்பட 3 பேர் காரின் கதவில் அமர்ந்து கொண்டு ஆரவாரம் செய்து பயணம் மேற்கொண்டனர். இதனை, பின்னால் வந்த காரில் இருந்த நபர், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து, மோட்டர் வாகனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பதினைந்து நாட்களில் 3வது முறையாக இது போன்று ஆபத்தான முறையில் பயணம் செய்யும் சம்பங்கள் நடந்துள்ளதால், மோட்டார் வாகனத்துறையினர் சிறப்பு சோதனையை தொடங்கியுள்ளனர்.
Next Story