பிரபல மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் காலமானார் | RIP

x

மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய ஃபாலி எஸ்.நாரிமன், பின்னர் டெல்லி சென்றார்.

இந்திரா காந்தி ஆட்சியில் அவசரநிலை பிரகடன முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார். புகழ்பெற்ற NJAC, கொலிஜியம் அமைப்புக்கு வழிவகுத்த முக்கிய வழக்குகளில் வாதிட்ட இவர், சிவில் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பினார். நீதித்துறை முன்னேற்றங்கள் குறித்த இவரது விமர்சனக் கருத்துக்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தன. சட்டப்பிரிவு 370 வழக்கின் சமீபத்திய தீர்ப்பு குறித்தும், நாரிமன் விமர்சித்திருந்தார். இவரது சுயசரிதையான "பிஃபோர் மெமரி ஃபேட்ஸ்" பரவலாகப் வாசிக்கப்படும் புத்தகமாக உள்ளதுடன், சட்ட மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களிடையே உத்வேகத்தை அளிக்கிறது. கடந்த 1991ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருதும், 2007ம் ஆண்டு பத்மவிபூஷண் விருதும் வழங்கப்பட்டன. இவரது மகன் ரோஹிண்டன் நரிமன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்