63 வயதில் 61 வழக்குகள்.. மிரளவைத்த தாதாவின் கடைசி பயணம்

x

உத்தரபிரதேசத்தில் உயிரிழந்த தாதாவும், அரசியல்வாதியுமான முக்தர் அன்சாரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரபல தாதாவாக வலம் வந்த 63 வயதான முக்தார் அன்சாரி மீது கொலை உள்ளிட்ட 61 வழக்குகள் உள்ளன. பின்னர் அரசியலுக்குள் நுழைந்த முக்தர் அன்சாரி உத்தரபிரதேச மாநிலம் மௌ சதார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி

பெற்றார். பாஜக எம்எல்ஏ கிருஷ்ண ஆனந்த் ராய் கொலை உள்ளிட்ட 8 வழக்குகளில் தண்டனை

பெற்ற முக்தர் அன்சாரி பாண்டா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று முன்தினம்

அவர் சிறையில் மயங்கி விழுந்த நிலையில், அவர் ராணி துர்காவாதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

9 டாக்டர்கள் அடங்கிய குழு சிகிச்சை

அளித்தும் நெஞ்சு வலி காரணமாக

சிகிச்சை பலனின்றி முக்தார் அன்சாரி

உயிரிழந்தார். அவர் சிறையில் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில்

முக்தர் அன்சாரியின் உடல்

காசிப்பூர் முகமதாபாத்தில் உள்ள காலிபாக் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்