உயிருக்கு வந்த ஆபத்தை சொடக்கு போடும் நொடியில் மாணவி உணர்ந்தது எப்படி? - விபரீதத்திலும் நடந்த அதிசயம்
கேரள மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கண்ணூர் அஞ்சரக்கண்டி ஜும்மா மசூதியில், காலையில் மதரஸா முடிந்து மாணவ, மாணவிகள் வீடு திரும்பிய போது, மழையின் காரணமாக மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது மாணவி ஒருவர், சுவர் இடியும் சத்தம் கேட்டு, நொடிப் பொழுதில் ஓடியதால் உயிர் தப்பினர். பதைபதைக்க வைக்கும் இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Next Story