பாலஸ்தீனத்துக்கு முழு ஆதரவு - இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா

x

ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் உறுப்பினராக இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்...

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐநா சபையின் எதிர்கால மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி மாநாட்டிற்கு இடையே பாலஸ்தீன அதிபர் மொஹ்மத் அப்பாஸை சந்தித்து கலந்துரையாடினார்.

காசாவில் நிலவி வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் பிராந்தியத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூழல் குறித்து பாலஸ்தீன அதிபரிடம் ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர் தொடர்ந்து மனிதாபிமான உதவி உட்பட பாலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை வழங்குவோம் என மீண்டும் உறுதியளித்தார்.

போர்நிறுத்தம், பிணைக் கைதிகளை விடுவித்தல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இரு நாட்டு தீர்வு மட்டுமே பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்கும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை நினைவுகூர்ந்தார். ஐ.நா.வில் பாலஸ்தீன உறுப்பினர் உரிமைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

இந்தியா-பாலஸ்தீன இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்