விதி மீறலா? சிக்கலில் பிரதமர் மோடி.. அது யாருடையது?

x

பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் திரிணாமூல் காங்கிரஸ் அடுத்த‌டுத்து புகார்களை அளித்துள்ளது.

ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சாகெட் கோக்லே கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேர்தல் விதிகளை மீறி இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதே போன்று, தேர்தல் விதிகளை மீறி, பிரச்சாரத்திற்கு மத்திய அரசின் நிதியை பிரதமர் மோடி பயன்படுத்துவதாக, திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ-பைரன் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்