"அந்த 2 இடத்தில் குறி தப்ப கூடாது" நேரடியாக தமிழ்நாட்டில் இறங்கும் மோடி, அமித்ஷா

x

#bjp | #loksabhaelection2024 | #pmmodi

"அந்த 2 இடத்தில் குறி தப்ப கூடாது" நேரடியாக தமிழ்நாட்டில் இறங்கும் மோடி, அமித்ஷா - ஒரு முடிவோடு இறங்கி அடிக்கும் பாஜக

தமிழகத்தில் பாஜக அதிக கவனம் செலுத்தும் தொகுதிகள் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு

400 பிளஸ் தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கில் 2024 தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாஜக, தமிழகத்தில் எப்படியாவது வெற்றியை வசமாக்கிவிட வேண்டும் என முட்டி மோதுகிறது.

2024 புதுவருட பிறப்பே பிரதமர் மோடியின் எண்ட்ரியோடே தமிழக அரசியல் களம் தொடங்கியது. அரசு நிகழ்ச்சிக்காக திருச்சிக்கு வந்தவர், ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீரங்கம், ராமேசுவரம் ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.

திருப்பூரில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிறைவு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டார். பிப்ரவரி 28 ஆம் தேதி நெல்லை, மார்ச் 4 ஆம் தேதி சென்னை நந்தனம், மார்ச் 15 கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பிரசாரம் செய்தார்.

தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே பிரசாரத்தை தொடங்கியவர், மார்ச் 18 ஆம் தேதி கோவையில் அண்ணாமலை, எல். முருகனோடு பேரணியை நடத்தினார். அதற்கு மறுநாள் சேலம் மாநாட்டில் கலந்துக் கொண்டார்.

இப்போது தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் மோடி 4 நாட்கள் பிரசாரம் செய்யவிருக்கிறார்.

வரும் 9 ஆம் தேதி வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ரோடு ஷோ நடத்துகிறார். அங்கு தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணிக்கும் ஆதரவு கேட்கிறார். அன்று மாலை தென்சென்னை வரும் பிரதமர் மோடி , பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகரில் ரோடு ஷோ நடத்துகிறார்.

10 ஆம் தேதி காலை நீலகிரி பாஜக வேட்பாளர் எல். முருகனுக்கு ஆதரவாக ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார்.

தொடர்ந்து கோவை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டுகிறார். மீண்டும் 13 ஆம் தேதி பெரம்பலூரில் பொதுக் கூட்டத்தில் பாரிவேந்தருக்கு பிரசாரம் செய்கிறார்.

14 ஆம் தேதி விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராதிகா சரத்குமாருக்கு பிரசாரம் செய்கிறார். செல்லும் தொகுதிகளில், சுற்றுவட்டார தொகுதிகளை சேர்ந்த கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டுகிறார் பிரதமர் மோடி.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, குமரியில் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அது அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டாலும், அவரது பயணம் அந்த தொகுதிகளில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை வேட்பாளராக அறிவித்ததுமே கவனம் பெற்ற கோவையில் பாஜக அதி தீவிரமாக செயல்படுகிறது. நைனார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதியிலும் தனிக்கவனம் செலுத்துகிறது.

தென்சென்னை, வேலூர், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கையும் பாஜக தேசிய தலைமை லிஸ்டில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் ராமநாதபுரம், தேனி தொகுதிகளிலும் பாஜக கவனம் செலுத்துதாகவும் தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்