பாபா சித்திக் மறைவு..! முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு | MK Stalin

x

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மறைவிற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானதாக குறிப்பிட்டுள்ளார். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை என்றும், கடும் கண்டனத்துக்குரியவை என்றும் பதிவிட்டுள்ளார். பாபா சித்திக்கின் குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்