தாய் அன்பில் உருகி முதல்வர் ஸ்டாலின் வடித்த காவிய வரிகள்

x

இன்று அன்னையர் தினத்தை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா... என புகழாரம் சூட்டி, தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து, அன்னையரைப் போற்றுவோம் என்றும், அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்