மிசோரம் ரயில்வே பாலம் விபத்து - ரயில்வே அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

x

மிசோரம் ரயில்வே பால விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு அந்த மாநில முதல்வர் ஜோரம் தங்கா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜோரம் தங்கா வெளியிட்டுள்ள பதிவில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுவதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், மிசோரம் ஆளுநர் மற்றும் முதல்வரிடம் பேசி அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்