பாரம்பரிய உடையணிந்து படுகா நடனமாடிய அமைச்சர் ராமச்சந்திரன்
உதகையில் நடைபெற்ற படுகர் தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பாரம்பரிய உடையில் படுகா நடனமாடி மகிழ்ந்தார். இளம்படுகர் சங்க அரங்கில் இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சமுதாயப் பிரதிநிதிகள் படுகர் சமுதாய மக்களின் கொடியை ஏற்றி வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Next Story