மிலாடி நபி ஊர்வல கலவரம் - சரமாரி விழுந்த தடியடி - உச்சகட்ட பரபரப்பில் கர்நாடகா

x

கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் மிலாடி நபி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு, 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில், கடந்த 28 ஆம் தேதி அப்பகுதி இஸ்லாமியர்கள் மிலாடி நபி கொண்டாட இருந்ததாகவும், இது அப்பகுதியில் உள்ள இந்துக்களின் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக தள்ளி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி போலீசாரின் அனுமதி பெற்று இஸ்லாமியர்கள் மிலாடி நபி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அப்போது, திப்பு சுல்தானின் படத்துடன், சர்ச்சைக்குரிய வசனங்களுடன் கூடிய பதாகைகளை இஸ்லாமியர்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதை அகற்றக்கோரி அப்பகுதியில் உள்ள இந்துகள் வாக்குவாதம் செய்ததில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்த நிலையில், அங்கிருந்த பதாகைகளையும் அகற்றியிருக்கின்றனர். இந்நிலையில், அன்று மாலை நடந்த மிலாடி நபி ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் மீதும், பாதுகாப்பிற்காக சென்ற போலீசார் மீதும் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. பகுதியே பரபரப்பாகி கலவரமான நிலையில், நிலைமையை கட்டுபடுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதில், 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற ராகிகுட்டா பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்