மேகதாது அணை விவகாரம்.. தமிழக அரசின் அடுத்த மாஸ்டர் பிளான் - அவசர அவசரமாக...
காவிரியிலிருந்து உரிய நீரை திறந்தவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரும் மனுவை, அவசர வழக்காக விசாரிக்குமாறு தமிழ்நாடு அரசு, திங்கட்கிழமை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிடவுள்ளது.
ஆகஸ்ட்டு மாதத்தில் எஞ்சியுள்ள நாள்களுக்கு தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை, உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விடுவது தொடர்பான உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு திங்கட்கிழமை முறையீட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், அன்றைய தினம் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிடவுள்ளது.தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஒருமுறை, தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மேகதாது அணைக்கு அனுமதி கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க, கர்நாடக அரசும் அன்றைய தினம் முறையிடவுள்ளது.