மருத்துவ கலந்தாய்வு... புதுச்சேரிக்கு சிறப்பு அனுமதி வழங்கி உத்தரவு | MBBS

x

புதுச்சேரியில் காலதாமதமாக மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்ட விவகாரத்தில், சிறப்பு அனுமதி வழங்கி மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவ கல்வியில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதனால் குறிப்பிட்ட தேதிக்குள் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல் கால தாமதமானது. இதைத் தொடர்ந்து, சிறப்பு அனுமதி கோரி தேசிய மருத்துவ ஆணையத்துக்கு புதுச்சேரி அரசு கடிதம் எழுதியிருந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை நீட்டித்தும், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்பிக்கொள்ளவும் சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவை தொடர்ந்து பிரதமர், உள்துறை, சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்