கூலித் தொழிலாளி மகள் டூ MBBS... ஏளனம் பேசியவர்களுக்கு சாதனையால் பதிலடி... நனவான மாணவியின் கனவு

x

காரைக்காலில் அரசு பள்ளியில் பயின்ற கூலித் தொழிலாளியின் மகளுக்கு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..


காரைக்காலில் திருமலைராயன் பட்டினம் அடுத்த நிரவி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகரின் 3வது மகள் தான் தேன்மொழி...

தந்தை கூலித்தொழிலாளியாக உள்ள நிலையில், அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார் தேன்மொழி... 12ம் வகுப்பில் 552 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதலிடமும் பிடித்துள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த தேன்மொழிக்கு நீட் தேர்வு பயிற்சி எட்டாக் கனியாக இருந்த சூழலில், தற்போதைய புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஏற்பாட்டில், கடந்த மார்ச் மாதம் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் நீட் தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்று, புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

இதனால் அவரது குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், வீட்டில் 3 பேரும் பெண் பிள்ளைகள் எனக்கூறி அவமானப்படுத்தும் நோக்கில் பேசியவர்களுக்கு கொடுத்த பதிலடி இது தான் எனக் கண்ணீருடன் கூறுகிறார் மாணவி தேன்மொழி..

மேலும், கூலி வேலை செய்து வரும் தந்தை மகளின் சாதனையை எண்ணி மனம் மகிழ்ந்து பாராட்டி வரும் சூழலில், தனது மகள் கல்லூரியில் இதர கட்டணங்கள் செலுத்துவதற்கு போதிய வசதி இல்லாததால் புதுச்சேரி அரசு மகள் படிப்பு செலவு ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்