கல்யாண விருந்து பந்தியில் நாலு எலும்பு துண்டுக்கு சண்டை.. சிதறு தேங்காயான 8 பேர் மண்டை

x

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள நவிப்பேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அசைவ விருந்து வழங்கப்பட்டது. விருந்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவில் மட்டன் துண்டுகளும், எலும்பும் குறைவாக இருப்பதாக மணமகன் தரப்பினர்

குற்றம் சாட்டினர். இது தொடர்பாக மணமகன் தரப்பினருக்கும், மணமகள் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி சண்டையாக மாறியது. அப்போது அவர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கட்டைகள், கற்கள் ஆகியவற்றால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் எட்டு பேருக்கு மண்டை உடைந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, காயமடைந்தவர்களை நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்