நாட்டின் ஹாட் டாப்பிக்கான தாய், மகள் - ஒரு சுவிட்ச் ஆன்னில் சிக்கிய மனோரமா

x

மகள் 8 அடி பாய்ந்தால் தாய் 16 அடி..

நாட்டின் ஹாட் டாப்பிக்கான தாய், மகள்

ஒரு சுவிட்ச் ஆன்னில் சிக்கிய மனோரமா

தலைகீழாய் மாறிய கனவு

மகாராஷ்டிராவில் துப்பாக்கியை காட்டி விவசாயியை மிரட்டிய மனோரமாவின் சொகுசு கார்... துப்பாக்கி... தோட்டாக்கள் எல்லாவற்றையும் போலீஸ் பறிமுதல் செய்திருக்கிறது.

போலீசார் மத்தியில் முகத்தை முடிக்கொண்டு அப்பாவியாக செல்லும் மனோரமாதான் மகாராஷ்டிராவில் ஹாட் டாபிக்...

ஆம்... கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுனு என சொல்லும் அளவிற்கு விவசாயியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோதான்... இப்போது மனோரமாவை சிறைக்குள் தள்ளியிருக்கிறது.

விவசாய நிலத்தில் சொகுசு காரில் பந்தாவாக இறங்கி..... பவுன்சர்கள் புடை சூழ... விவசாயியை மிரட்டும் இவர் வேறு யாருமில்லை... அகில இந்திய அளவில் மோசடிக்கு பெயர்போன மகாராஷ்டிராவில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த பூஜா கேத்கரின் தாய்தான்...

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான பூஜாவின் தந்தை, முல்சி கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்தை வாங்கியிருக்கிறார். அங்குதான் பிரச்சினையை டீல் செய்ய துப்பாக்கியை எடுத்திருக்கிறார் மனோரமா... இந்த வீடியோ குறித்து பல்வேறு பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்தது மகாராஷ்டிரா போலீஸ்...

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பூஜா கேத்கர் செய்த தில்லுமுல்லு எல்லாம் அம்பலமான வேளையில், துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் ஆயுத வழக்கில் சிக்கிய மனோரமா புனே போலீசுக்கு டிமிக்கி கொடுக்க காரில் சுற்றிக்கொண்டிருந்தார்.

போலீஸ் தேடுவதை அறிந்துகொண்ட மனோரமா தொடர்ந்து இடத்தை மாற்ற... குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து நோட்டமிட்டு வந்தனர். அதுவரையில் செல்போனை அணைத்து வைத்திருந்த மனோரமா... சுவிட்ச் ஆன் செய்ய... போலீசும் ராய்காட் சென்று மனோரமாவை கொத்தாக தூக்கியது. அங்கும் போலீசுக்கு ட்விஸ்ட் வைத்திருந்த மனோரமா ஓட்டலுக்கு சென்று போலீசார் விசாரித்த போது மனோரமா என்று யாரும் அங்கு வரவில்லை என தெரியவந்துள்ளது. அப்போது இந்துபாய் என ஆதார் கார்டை காட்டி... மனோரமா ஓட்டலில் ரூம் புக் பண்ணியது அம்பலமாகியது.

மனோரமாவை கைது செய்த போலீஸ்... புனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்கள் கஸ்டடிக்கு எடுத்து விசாரித்து வருகிறது. விசாரணை அடிப்படையில் அவரது கார்... துப்பாக்கி... தோட்டாக்களை எல்லாம் பறிமுதல் செய்திருக்கிறது போலீஸ்... ஹோமியோபதி மருத்துவரான மனோரமா, பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார். அரசியலில் மேலும்... மேலும்... வளர பணத்தை அள்ளியும் விதைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது மொத்தமாக மிரட்டல் வழக்கில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

அவரை விசாரிக்கையில் மேலும் பல மோசடிகள் அம்பலமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்