"மன்மோகன் சிங் அன்றே அறிவித்தார்" | Manmohan Singh | Congress | Thanthitv

x

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா, உள்ளிட்ட மொழிகளை செம்மொழியாக அறிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல், மராட்டிய மொழியையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என 2014 ஆம் ஆண்டு அப்போதைய மகாராஷ்டிரா முதல்வராக இருந்த அசோக் சவான், மத்திய அரசுக்கு சமர்ப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று, மராட்டிய மொழியை செம்மொழியாக அறிவிக்க, கடந்த10 ஆண்டுகளாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மராட்டிய மொழி செம்மொழியாக அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்