மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி

x

மணிப்பூர் மக்களவை தொகுதிகளில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில், ஏப்ரல் 22-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 19-ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், மொத்தம் 47 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கே. மேகசந்திரா மனு அளித்தார். இந்நிலையில், ஏப்ரல் 22-ஆம் தேதி 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்