மணிப்பூர் பாலியல் வன்முறை.. கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

x

மணிப்பூர் கலவரம் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பாக, 2 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் கலவரத்தின்போது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரிக்கவும், மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற 3 பெண் நீதிபதிகள் கீதா மித்தல், ஷாலினி ஜோஷி, ஆஷா மேனன் ஆகியோர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. மேலும், சி.பி.ஐ விசாரித்து வரும் 12 பாலியல் வன்முறை வழக்குகளை கண்காணிக்கவும், அதில் உடந்தையாக இருந்த போலீசாரை விசாரிக்கவும், மகாராஷ்டிர முன்னாள் டி.ஜி.பி தத்தாத்ரேய் பட்சல்கீகரை நியமித்துள்ளது. இந்நிலையில், 3 நீதிபதிகள் அடங்கிய குழுவினரும், மகாராஷ்ட்ர முன்னாள் டி.ஜி.பியும், 2 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்கள் மீது வரும் அக்டோபர் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்