சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட மணிப்பூர் விவகாரம்..?வெளியான அறிவிப்பு
மணிப்பூரில் கலவரத்தின் தொடர்ச்சியாக, கடந்த மே 4-ம் தேதி, இளம்பெண்கள் இருவர், ஒரு கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ பதிவு செய்த நபரை போலீசார் ஏற்கனவே கைது செய்து, செல்போனில் உள்ள வீடியோக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விசாரணையை மணிப்பூருக்கு வெளியே அசாம் மாநிலத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. மணிப்பூர் வீடியோ தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இன்று இதுகுறித்த பிரமாண பத்திரத்தையும் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்ய உள்ளது. அதன் பின்னர், இந்த வழக்கு முறைப்படி சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
Next Story