மீன் சர்ச்சை - மம்தா Vs மோடி... கொதிக்கும் பாஜக

x

பிரதமர் மோடிக்கு அவர் விரும்பும் உணவை சமைத்துக் கொடுக்க தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவராத்திரியின் போது, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், மீன் சாப்பிட்டு தனது முகலாய மனநிலையை வெளிப்படுத்தியதாக பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இந்நிலையில், தனக்கு சைவ உணவில் டோல்காவும், அசைவத்தில் மீன் குழம்பும் பிடிக்கும் என தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி , பிரதமர் மோடி தாம் சமைத்து கொடுத்தால் அந்த உணவை ஏற்பாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு, இந்து மதத்தில் பல்வேறு சமூகங்களால் பல்வேறு உணவு பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், மக்களின் உணவு பழக்கவழக்கங்கள் மீது பாஜக கட்டுப்பாடு விதிக்க விரும்புவதாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, பிரதமர் அசைவம் சாப்பிட மாட்டார் என்று தெரிந்திருந்தும் வேண்டுமென்றே அவரிடம் வம்பு இழுக்கிறார் மம்தா பானர்ஜி என்று தெரிவித்துள்ளது. பிரதமரை அவமதிப்பதன் மூலம் சனாதானி இந்துக்களை மம்தா அவமதிப்பதாக பாஜக சாடியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்