"19 லட்சம் இந்து வங்காளிகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்" -மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்க மாநிலத்தில் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி சட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வடக்கு 24 பர்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், அசாமில் 19 லட்சம் இந்து வங்காளிகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தனது பெற்றோரின் பிறந்தநாள் கூட தெரியாத நிலையில், அவர்களது சான்றிதழ்களை கேட்டால் எப்படி தரமுடியும் என கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி, பெற்றோரின் சான்றிதழ்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இணைக்காவிட்டால் அனைவரும் வெளிநாட்டவர்களாக கருதப்படுவார்கள் என்றார். 50 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்களின் சான்றுகளை கேட்டால், முதலில் பாஜகவில் இருப்பவர்களிடம் கேட்டு விண்ணப்பிக்க சொல்லுங்கள் என்ற மம்தா பானர்ஜி, பாஜகவினரே விண்ணப்பிக்காவிட்டால், மற்றவர்கள் எதற்கு விண்ணப்பிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். இதனால், மேற்கு வங்கத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார்.